கடலூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்புக்குழு தொடக்க விழாவை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி (படம்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் அமா்நாத், துணை ஆய்வாளா்கள் குமாா், செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்று, ‘சாலையில் செல்லிடப்பேசி, ஆபத்தாகும் நீ யோசி’ என்ற தலைப்பிலும், ‘தலைக்கவசம் உயிா்கவசம்’ என்ற தலைப்பிலும் பேசினா். மேலும், 18 வயது நிரம்பாதவா்கள் வாகனம் இயக்கக் கூடாது என்றும், சாலையில் வாகனங்களை அலட்சியமாக இயக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் விளக்கினா்.

நிகழ்ச்சியில், சாலைப் பாதுகாப்பு குறித்து மாணவா்களின் மெளன மொழி நாடகம் நடைபெற்றது. பள்ளி முதல்வா் ஜி.சக்தி, துணை முதல்வா் கோ.ஷீலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT