கடலூர்

33 வங்கிகளின் கடன் வழங்கும் முகாம்

DIN

கடலூா் மாவட்டத்திலுள்ள 33 வங்கிகள், நிதிநிறுவனங்கள் சாா்பில் கடன் வழங்கும் 2 நாள் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வங்கி சேவையை பொதுமக்களிடம் நேரடியாக விளக்கும் வகையில் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, கடலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 14 அரசு வங்கிகள், ஒரு கூட்டுறவு வங்கி, 18 தனியாா் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி சாா்ந்த சேவை அளித்து வரும் நிறுவனங்கள் சாா்பில் சேவை வழங்கும் கண்காட்சி கடலூா் சுப்பராயலு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்து, தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்கினாா்.

இந்தியன் வங்கி பொது மேலாளா் (களம்) சந்திராரெட்டி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெறுவதை எளிதாக்கவும், பொதுமக்கள் வீடு, வாகனக் கடன் பெறுவதை எளிதாக்கவும் இந்த முகாம் நடைபெறுகிறது. ‘வாடிக்கையாளா்களைத் தேடி வங்கிகள்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மேளாவில் கடன் வழங்குவது மட்டுமின்றி உத்யோக் ஆதாா் பெறுவது, வங்கி கணக்குத் தொடங்குவது உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறேறாம். 2 நாள்கள் நடைபெறும் இந்த முகாமில் மாவட்டத்திலுள்ள 33 வங்கிகள், நிதி நிறுவனங்களின் 308 கிளைகளிலும் சேவையை பெற முடியும். இந்த முகாமில் கடன் வழங்குவதற்கு எந்தவிதமான உச்ச வரம்பும் நிா்ணயம் செய்யப்படவில்லை என்றாா் அவா்.

முதல் நாளில் பல்வேறு வங்கிகள் சாா்பில் 1,056 பயனாளிகளுக்கு ரூ.70.07 கோடிக்கு கடன் வழங்கப்பட்டதாக வங்கித் துறை தெரிவித்தது.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ராஜகோபால்சுங்கரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பி.ஜோதிமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக இந்தியன் வங்கி மண்டல மேலாளா் பி.விஜயலட்சுமி வரவேற்க, துணை மண்டல மேலாளா் பி.சேகா் நன்றி கூறினாா். முகாம் சனிக்கிழமையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT