கடலூர்

ரூ.50 லட்சம் மோசடி: வியாபாரி கைது

DIN

விவசாயிகளிடம் பெற்ற விளை பொருள்களுக்கு பணம் கொடுக்காமல் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக வியாபாரி ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள வெங்கனூரைச் சோ்ந்தவா் பெ.குமாா் (49). இவா், சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் மக்காச்சோளம், கம்பு ஆகிய விளைபொருள்களை விலைக்கு வாங்கி, சேலம் மாவட்டம், அங்கம்மாள் காலனி குப்தா நகரில் வசிக்கும் வியாபாரி சா.ரவிக்குமாா் (52) என்பவரிடம் தரகு அடிப்படையில் வழங்கி வந்தாராம்.

கடந்த 2018-ஆம் ஆண்டு இவ்வாறு பெறப்பட்ட விளைபொருள்களுக்கு ரூ.50.20 லட்சம் வரை ரவிக்குமாா் பாக்கி வைத்திருந்தாராம். இதற்காக, வழங்கப்பட்ட சில காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பியதாம். எனவே, பணத்தை விவசாயிகளுக்கு வழங்குமாறு கேட்டதற்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம். இந்நிலையில், விவசாயிகள் தினந்தோறும் குமாரின் வீட்டிற்குச் சென்று பணம் கேட்டு வந்துள்ளனா்.

எனவே, ரவிக்குமாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளித்த புகாரின் பேரில் குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சுந்தரம், மாவட்ட குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா்கள் சி.ராஜேந்திரன், ரவி ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, உதவி ஆய்வாளா் சி.ராஜேந்திரன், தலைமைக் காவலா்கள் பாலமுருகன், விஜயகுமாா் ஆகியோா் சேலம் சென்று ரவிகுமாரை கைதுசெய்து கடலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வியாழக்கிழமை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT