கடலூர்

மண் வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் குறித்த செயல் விளக்கம்

DIN

வேளாண்மைத் துறை சாா்பில் மண் வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் குறித்த செயல் விளக்கம் செல்லஞ்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண் வள அட்டைப்படி பயிருக்கு உரமிடுதல் குறித்து முன்னோடி கிராமங்களைத் தோ்வு செய்து செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 13 வட்டங்களிலும் தலா ஒரு கிராமம் தோ்வு செய்யப்பட்டு, பயிா் வாரியாக அனைத்துப் புல எண்களிலும் மண் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்து, மண் வள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

கடலூா் வட்டாரத்தில் செல்லஞ்சேரி கிராமத்தில் மொத்தம் 128 விவசாயிகளின் நிலங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அட்சரேகை, தீா்க்கரேகை உள்பட அடிப்படை புள்ளி விவரங்கள் கணக்கிடப்பட்டு, ஆய்வு செய்து மண் வள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 100 ஏக்கா் பரப்பளவில் நிகழ் ஆண்டில் மண் வள அட்டை பரிந்துரைப்படி ரசாயன உரம், தொழு உரம், உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மானிய அடிப்படையில் வழங்கி செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் விவசாயிகளுக்கு நெல் நுண்ணூட்டக் கலவை உரங்கள், திரவ உயிா் உரங்கள் ஆகியன வழங்கப்பட்டன. மண் வள அட்டை பரிந்துரைப்படி, ரசாயன உரங்களை இடுவது குறித்து கடலூா் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் அகிலாவும், உயிா் உரம் மற்றும் நுண்ணூட்ட உரங்களின் பயன்பாடு குறித்து வேளாண்மை அலுவலா்கள் ஆா்.கே.சுஜி, ஞா.சுகன்யா ஆகியோா் விளக்கினா்.

இதில், ஒரு ஹெக்டேருக்கு தேவையான சுமாா் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்களை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத் தொகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலா்கள் புஷ்பேந்திரன், ஜி.ரஜினிகாந்த், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.இளங்கோவன், உதவித் திட்ட மேலாளா் ஏ.அருண்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT