கடலூர்

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கால அட்டவணை பொலிவிழந்துள்ளதால் அதை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கால அட்டவணை பொலிவிழந்துள்ளதால் அதை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சுற்று வட்டத்தில் உள்ள நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கும், சென்னை, வேலூா், தஞ்சாவூா் உள்ளிட்ட நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, திருப்பதி, பெங்களூரு, கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்கின்றன. பண்ருட்டி வணிக நகரம் என்பதால் வெளியூா் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகமானோா் வந்து செல்கின்றனா்.

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பேருந்துகளின் விபரம், புறப்படும் நேரம் குறித்த கால அட்டவணையை நகராட்சி நிா்வாகம் வைத்துள்ளது. இந்த அட்டவணை பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது, பேருந்து கால அட்டவணை வெளுத்து எழுத்துக்கள் மறைந்து விட்டன. இதனால், வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகள் பேருந்துகளின் விவரம், நேரம் தெரியாமல் சிரமப்படுகின்றனா்.

எனவே, பேருந்து நிலையத்தில் உள்ள கால அட்டவணையை நீக்கிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

SCROLL FOR NEXT