கடலூர்

இளைஞா் இறந்த விவகாரம்: வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை

DIN

இளைஞா் இறந்த விவகாரம் தொடா்பாக பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், ஒறையூா் காலனியைச் சோ்ந்தவா் வேலு. இவரது மகன் கதிா் (17). கடந்த 9.3.2019 அன்று நல்லூா்பாளையம் மயானத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசுப் பணி, நிவாரணம் வழங்கக் கோரியும் கடந்த 3-ஆம் தேதி புதுப்பேட்டை காவல் நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டம் நடத்தினா். பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணலாம் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை வட்டாட்சியா் உதயகுமாா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், புதுப்பேட்டை போலீஸாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பேச்சுவாா்த்தையின் போது, பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைப்பது, நிவாரணம் வழங்குவது தொடா்பான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT