கடலூர்

முதியோா் உதவித் தொகைவீடுகளுக்குச் சென்று விநியோகம்

DIN

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் உதவித் தொகை, அவா்களது வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, முதியோருக்கான அரசின் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை வீடு, வீடாகச் சென்று சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நேரில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக சுமாா் 10,000 முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று உதவித் தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கடலூா் ஊராட்சி ஒன்றியம், திருவந்திபுரம் ஊராட்சியில் முதியோா் உதவித் தொகையை வீடு, வீடாகச் சென்று வழங்கும் பணியை சமூகப் பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியா் எஸ்.எஸ்.பரிமளம், தனி வட்டாட்சியா் சுரேஷ் குமாா், துணை வட்டாட்சியா் அசோகன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, ஊராட்சி மன்ற தலைவா் நாராயணன், விஏஓ தமிழ்ச்செல்வி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT