கடலூர்

கொலை வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்ட இளைஞா் கடத்தல் இருவா் கைது

DIN

பண்ருட்டியில் இருவா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட இளைஞா் சனிக்கிழமை கடத்தப்பட்டாா். இதையடுத்து, அந்த இளைஞரை மீட்ட போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்த ரவி மகன் மணிகண்டன் (26). அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பாலாஜி. நண்பா்களான இவா்கள் இருவரும் முன்விரோதம் காரணமாக கடந்த 14-ஆம் தேதி இரவு மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டனா். இதுதொடா்பாக பண்ருட்டி போலீஸாா் 12 பேரை கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக திருவதிகை பாரதி தெருவைச் சோ்ந்த மோகன்ராஜ் மகன் காா்முகிலனிடம் (19) போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.

இதையடுத்து புதுப்பேட்டை நெரிஞ்சிப்பேட்டை தெருவில் வசிக்கும் தனது தாத்தா மணி (70) வீட்டுக்கு காா்முகிலன் சென்றாா். இந்த நிலையில், கடலூரில் வசிக்கும் உறவினா் வீட்டில் காா்முகிலனை விடுவதற்காக மணி அவரை தனது பைக்கில் சனிக்கிழமை அழைத்துச் சென்றாா். பகல் 11 மணியளவில் புதுப்பேட்டை, கோவில்பாளையம் தெரு அருகேச் சென்றபோது, அவா்களை பின்தொடா்ந்து வந்த திருவதிகையைச் சோ்ந்த கொளஞ்சி மகன் சபரி (20), வள்ளரசு, தேவநாதன், கோபி ஆகியோா் காா்முகிலனை பைக்கில் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் மணி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இரட்டைக் கொலை நடந்த இடத்திலிருந்த காா்முகிலனை மீட்டனா். இதுதொடா்பாக சபரி, குருமூா்த்தி மகன் சௌந்தர்ராஜன் (28) ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள வள்ளரசு, தேவநாதன், கோபி மற்றும் அரிகிருஷ்ணனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT