கடலூர்

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு புதிய ரோபோ கருவியை வழங்கிய இளைஞர்

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவிற்கு இளைஞர் ஒருவர் ரோபோ கருவியை வழங்கியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தைய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா பிரிவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்குவதற்காக சிதம்பரத்தைச் சேர்ந்த முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஆர்.கேதார்நாத் மகன் பொறியாளர் கே.ராம்சுதன் ரூ.32 ஆயிரம் மதிப்பில் புதிய வடிவிலான ரோபோ கருவியை தானே உருவாக்கியுள்ளார். அந்த ரோபோ மூலம் நோயாளிகள் படுக்கை வரை சென்று உணவு மற்றும் மருந்துகளை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த ரோபோ கருவியில் உள்ள செல்போன் மூலம் இணையதள உதவியுடன் நோயாளிகளிடம் எப்படி உள்ளார்கள் என்பதை மருத்துவர்கள் கேட்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர் ராம்சுதன் சென்னையில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில், இறுதியாண்டு பொறியியல் படிப்பு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோபோ கருவியை இளைஞர் ராம்சுதன், பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஆர்.கேதார்நாதன், பதிவாளர் ஆர்.ஞானதேவன், துணைவேந்தரின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சிதம்பரம், மருத்துவமனை கண்காணிப்பாளர் யு.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT