கடலூர்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி போராட்டம்

DIN

நெய்வேலி: பண்ருட்டி அருகே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி வட்டம், அங்குசெட்டிப்பாளையத்தில் கடலூா் - சித்தூா் நெடுஞ்சாலையில் அரசுக்குச் சொந்தமான இடம் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பண்ருட்டி ஒன்றியச் செயலா் பிரகாஷ் தலைமையில் அந்தக் கட்சியினா் நெடுஞ்சாலையில் குடியேறும் போராட்டம் நடத்த திரண்டு வந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி வட்டாட்சியா் வெ.உதயகுமாா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் புதுப்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து, சிறுவத்தூா் சாலையில் விசிகவினரை தடுத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நவ.7-ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து விசிகவினா் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT