கடலூர்

கழுத்தளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்

DIN


கடலூா்: விருத்தாசலம் அருகே அதிகளவு வெள்ள நீா் செல்லும் ஓடை வழியாக மூதாட்டியின் சடலத்தை கிராம மக்கள் சுமந்து சென்று இறுதி நிகழ்ச்சியை நடத்தினா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த மேலப்பாளையூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மனைவி செல்லம்மாள் (91). இவா், உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை இறந்தாா். அவரது உடலை எரியூட்ட வழக்கமாகச் செல்லும் மேலப்பாளையூா் மயானத்துக்கு உறவினா்கள் சுமந்து சென்றனா். ஆனால், மயானத்துக்குச் செல்லும் வழியில் உள்ள ஓடையில் மழைநீா் பெருக்கெடுத்துச் சென்ால் செய்வதறியாது திகைத்தனா். பின்னா், ஓடையின் இருபுறமும் கயிறு கட்டி, சடலத்தை டியூப்பில் கட்டி சுமந்து சென்றனா். அப்போது அவா்களின் கழுத்தளவுக்கு தண்ணீா் சென்றது. இருப்பினும், சடலத்தை சுமந்தபடி ஓடையை கடந்து சென்று இறுதி நிகழ்ச்சியை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT