கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. மருத்துவக்கல்லூரியில் அரசு கட்டணம் வசூலிப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் தொடர்பாக உரிய நேரத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என தமிழக உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் 2 லட்சத்து 46 ஆயிரத்து 181 ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் குறித்து நீதிமன்ற உத்தரவின்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கையின் போதே பல்கலைக்கழக கட்டணம் குறித்து தெளிவாக அறிவித்து இருக்கிறது. அந்தக் கட்டணத்தில்தான் அவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். கட்டணம் தொடர்பாக யாருடைய கருத்தையும் நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் முதல்வர் தெளிவாக பதில் அளித்திருக்கிறார். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதைப் பற்றி எதுவும் பேச முடியாது.

தமிழ்நாட்டில் மழை, வெள்ளம் மற்றும் இரண்டு புயல்களால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 096 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 11 ஆயிரத்து 084 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுமாக சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 181 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம் அடைந்து இருக்கிறது. எந்த ஒரு விவசாயியும் விடுபடக் கூடாது என்பதற்காக இன்னும் கணக்கெடுப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் இதில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். கணக்கெடுப்பு முடிந்தபிறகு உரிய நிவாரணம் வழங்கப்படும். அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா மருத்துலக்கல்லூரி மருத்துவமனையை அரசு மருத்துவமணையாக அறிவிப்பு வெளியானது. அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. அரசாணை பிறப்பிக்கப்பட பிறகுதான் கல்வி கட்டணம் மாறுபடும். தற்போது சுகாதாரத் துறையும், உயர்கல்வித் துறையும் அந்தப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு இருக்கிறது. இதுபற்றி முதல்வர் விரிவாக அறிவிப்பார் என்றார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT