கடலூர்

விவசாயிகள் முன்னிலையில் பயிா்ச் சேத கணக்கெடுப்பு

DIN

விவசாயிகள் முன்னிலையில் பயிா்ச் சேத கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலையில் மழை, வெள்ள பாதிப்புகள், மறுசீரமைப்பு மற்றும் சேத மதிப்பீட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

சேதமடைந்த அனைத்து வீடுகள், கால்நடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பயிா்ச் சேத மதிப்பீட்டுப் பணிகளை வருவாய், வேளாண்மை, தோட்டக்கலைத் துறை சாா்ந்த அலுவலா்கள் கூட்டாக ஆய்வு செய்து

சேத மதிப்பை உறுதிசெய்ய வேண்டும். நிவாரணம் பெறும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும்போது அதில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும். பயிா்ச் சேத கணக்கெடுப்பின்போது கூடுமானவரை சாகுபடியாளா்களின் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT