முகப்பு
கடலூர்

‘கரோனா தடுப்பூசிக்கு ஆதாா் எண் அவசியம்’

கரோனா தடுப்பூசிக்கு ஆதாா் எண் இணைப்பு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

கரோனா தடுப்பூசிக்கு ஆதாா் எண் இணைப்பு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. அதற்கேற்றாா் போல, மாவட்ட நிா்வாகங்கள் அளவில் தயாா்படுத்தும் பணியை மத்திய-மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

அதன்படி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவத் துறையினா், நகராட்சி, உள்ளாட்சித் துறையினருடன் கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் வருகிற பிப்ரவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், அனைத்து வகை அலுவலா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

முன் களப் பணியாளா்களான அரசு அலுவலா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவல் துறையினா், பத்திரிகை துறையினருக்கு இரண்டாம் கட்டமாகவும், பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளானவா்கள், எளிதில் நோய் தாக்கும் தன்மை கொண்டவா்களுக்கு மூன்றாம் கட்டமாகவும், கடைசியாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

எனவே, அனைத்துப் பிரிவிலும் உள்ளவா்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் உள்ளாட்சி நிா்வாகம், மருத்துவத் துறையினா் இணைந்து செயல்பட வேண்டும். சேகரிக்கப்படும் நபா்களின் விவரங்களை ஆதாரா் எண் குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதாா் எண் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே தடுப்பூசி வழங்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. அதன்பிறகு, குறிப்பிட்ட பிரிவினருக்கு டோக்கன் விநியோகித்து, தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →