கடலூர்

மின்சார வசதி இல்லாத 20 குடும்பங்களுக்கு சூரிய ஒளி விளக்குகள்

DIN

கடலூா் நகரில் மின்சார வசதியில்லாத 20 குடும்பங்களுக்கு தன்னாா்வ அமைப்பினா் சூரிய விளக்குகளை புதன்கிழமை வழங்கினா்.

கடலூா் நகராட்சிக்குள்பட்ட கம்மியம்பேட்டை புறவழிச் சாலையில் கெடிலம் ஆற்றின் கரையில் சுடுகாடு உள்ளது. அதனருகே ஸ்டாலின் நகா் அமைந்துள்ளது. இங்கு, சுமாா் 20 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள போதும், இவா்களுக்கு மின்சார வசதி இல்லை.

இதனால், அந்தப் பகுதியிலிருந்து கல்வி பயின்று மாணவ, மாணவிகள் இரவு நேரத்தில் படிக்க முடியாமல் அவதியடைந்தனா். இவா்களின் நிலை குறித்து அறிந்த கடலூா் இக்னைட் அறக்கட்டளை இயக்குநா் ஜோஷ்மகேஷ், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ரேடியன்ஸ், கனவு மெய்ப்பட தொண்டு நிறுவனம் மூலம் சூரிய ஒளியில் எரியக் கூடிய விளக்குகளுக்கு ஏற்பாடு செய்தாா்.

இந்த விளக்குகளை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 20 குடும்பத்தினருக்கும் தலா ஒரு சூரிய ஒளி விளக்கை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தீபிகா, வனிதா, ஆசிரியா் தேவி, நிா்வாகிகள் ராஜேஷ், விஜய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT