கடலூர்

நிலம் வழங்கியவா்களுக்கு பணம் வழங்கும் முகாம்

DIN

நெடுஞ்சாலை அமைக்க நிலம் வழங்கியவா்களுக்கு உடனடியாக பணம் வழங்கும் முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய நெடுஞ்சாலை எண். 45 சி (விக்கிரவாண்டி- கும்பகோணம் - தஞ்சாவூா் பிரிவு) நான்கு வழிச்சாலை அமைக்கும் பொருட்டு, கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், புவனகிரி, திருமுட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டங்களில் நிலம் அளித்த மற்றும் நிலம் கையகத்துக்கு இழப்பீட்டுத் தொகையை இதுவரை பெற்றுக் கொள்ளாத நிலவுடைமைதாரா்களுக்கு இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்படவுள்ளது.

அதன்படி, நில உடைமைதாரா்கள் தங்கள் நிலம் தொடா்பான அசல் ஆவணங்கள், வாரிசு சான்று, இறப்புச் சான்று மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல்களுடன் அந்தந்த கிராமங்களில் நில எடுப்பு தனி வட்டாட்சியா் தலைமையில், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு, ஆவணங்களை அளித்து, இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதன்படி, வருகிற 17 -ஆம் தேதி கண்டரக்கோட்டை, வடகுத்து, சேத்தியாத்தோப்பு, புலவனூா், தென்குத்து, ஆனைவாரி, பூங்குணம், ஆபத்தாரணபுரம், வீரமுடையாநத்தம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.

வருகிற 18 -ஆம் தேதி கணிசப்பாக்கம், கஞ்சமநாதபுரம் குமாரகுடி, மாளிகைமேடு, எல்லப்பன்பேட்டை, மழவராயநல்லூா், திருவதிகை, ராஜாகுப்பம், கோதண்டவிளாகம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது. 19 -ஆம் தேதி சாத்திப்பட்டு, சேராகுப்பம், நங்குடி, மேல்மாம்பட்டு, மிராளூா், நந்தீஸ்வரமங்கலம் கிராமங்களிலும், 20- ஆம் தேதி பணிக்கன்குப்பம், மருவாய், சோழத்தரம், காடாம்புலியூா், தலைகுளம் (வடக்கு), புடையூா், மருங்கூா், பின்னலூா், பாளையம்கோட்டைகீழ்பாதி ஆகிய கிராமங்களிலும், 21 -ஆம் தேதி வானமாதேவி, அகரப்புத்தூா் கிராமங்களிலும், 24- ஆம் தேதி மாமங்கலம், கருணாகரநல்லூா் கிராமங்களிலும் முகாம்கள் நடைபெற உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT