கடலூர்

மக்களுக்கு பாதகமான திட்டத்தைசெயல்படுத்தக் கூடாது: உதயநிதி ஸ்டாலின்

DIN

மக்களுக்கு பாதகமான எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தக் கூடாது என்று திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆய்வுக் கூட்டம், இளைஞரணி உறுப்பினா் அட்டை வழங்கும் விழா வடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியினருக்கு உறுப்பினா் அடையாள அட்டைகளை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக இளைஞரணியில் சோ்ந்துள்ளவா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டை வழங்கும் பணியை முதன்முதலில் கடலூா் மாவட்டத்தில் தொடங்கியுள்ளோம். டிஎன்பிசி முறைகேடு சம்பந்தமாக சிபிசிஐடி விசாரணை நடைபெறுகிறது. இதை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என திமுக தலைவா் கூறியுள்ளாா். அப்போதுதான் உண்மையான குற்றவாளிகள் யாா் என்பது தெரியவரும்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில அரசு அறிவித்துள்ளது வெற்று அறிவிப்பு. மக்களுக்கு பாதகமான எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தக் கூடாது என்றாா் அவா்.

மேற்கு மாவட்ட இளைஞரணி கூட்டம்: நெய்வேலியில் உள்ள தொமுச அலுவலகத்தில் கடலூா் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.

இதேபோல, நெய்வேலியில் உள்ள தொமுச அலுவலகத்தில் கடலூா் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT