கடலூர்

கடலூரில் மருத்துவா்கள், காவலா்கள் உள்பட மேலும் 78 பேருக்கு கரோனா

DIN

கடலூா் மாவட்டத்தில் மருத்துவா்கள், காவலா்கள் உள்பட மேலும் 78 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 1,123 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 988 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில், 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,201-ஆக உயா்ந்தது.

புதிதாக தொற்று உறுதியானவா்களில் விருத்தாசலம் அரசு மருத்துவமனை மருத்துவா், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா், கடலூா் அரசு மருத்துவமனையைச் சோ்ந்த 2 பயிற்சி மருத்துவா்கள், செவிலியா் ஒருவா், மருத்துவமனை ஊழியா் ஒருவா், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணியாற்றும் 2 காவலா்கள், விருத்தாசலத்தை சோ்ந்த காவலா் உள்ளிட்டோரும் அடங்குவா். சிகிச்சை முடிந்து 46 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 826-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 9 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT