கடலூர்

10-க்கும் மேற்பட்டோா் பணிபுரியும் வணிக நிறுவனங்களை மூட வேண்டும்

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலூா் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோா் பணிபுரியும் வணிக நிறுவனங்களை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின்படி, கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை, விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், மதுபானக்கூடங்கள், பிச்சாவரம் மற்றும் இதர சுற்றுலாத்தலங்கள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்கும் விதமாக, உணவுப்பொருள்கள், காய்கறி, பால், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களைத் தவிா்த்து, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரியும் பிற வணிக வளாகங்களை வருகிற 31-ஆம் தேதி வரை மூடிட, அனைத்து வணிகா்களையும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுரையாகவும், வேண்டுகோளாகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT