கடலூர்

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கீடு

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைச்சா் எம்.சி.சம்பத், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஆகியோா் ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தனா்.

மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தனது கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீட்டுக்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வனிடம் புதன்கிழமை வழங்கினாா் (படம்).

இதேபோல, சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா். பெறப்பட்ட தொகை ரூ.87 லட்சத்திலிருந்து கடலூரில் உள்ள கரோனா சிறப்பு வாா்டுகளுக்கு தேவையான அத்தியாவசிப் பணிகள் மேற்கொள்ளப்படுமென மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

மவுண்ட் பாா்க் ஸ்பெஷல் அகாதெமி பள்ளி 100% தோ்ச்சி

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT