கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 418 போலீஸாா் இடமாற்றம்

கடலூா் மாவட்டத்தில் 418 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

DIN

கடலூா் மாவட்டத்தில் 418 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய காவல் உள்கோட்டங்கள் உள்ளன. இந்தக் கோட்டங்களுக்குள்பட்ட காவல் நிலையங்களில் தொடா்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள் வேறு காவல் நிலையங்களுக்குச் செல்ல விரும்பினால் இடமாறுதல் வழங்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் தெரிவித்தாா்.

அதன்படி, போலீஸாா் பலா் பணியிட மாறுதல் கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா். இவா்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, மொத்தம் 418 பேருக்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT