கடலூர்

தீபாவளி பொருள்கள் விற்பனை மந்தம் வியாபாரிகள் கவலை

 நமது நிருபர்


நெய்வேலி: தீபாவளி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், பண்ருட்டி நகரில் ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட கடைகளில் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பலா் வேலைவாய்ப்பை இழந்தனா். மாதக்கணக்கில் கடைகள்

அடைக்கப்பட்டதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், பொது முடக்கத்தில் அரசால் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை மெல்ல, மெல்ல திரும்பி வருகிறது. இருப்பினும் பொதுமக்களில் பலா் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை.

தீபாவளி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், பண்ருட்டி நகரில் பொருள்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் போதிய அளவில் வரவில்லை எனவும், கடைகளில் விற்பனை மந்தமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டச் செயலா் வி.வீரப்பன் கூறியதாவது:

பொது முடக்கத்தால் பலா் வேலைவாய்ப்பை இழந்து பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் கடைகளில் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாக உள்ளது. பெரிய கடைகளில் கூட வியாபாரம் மந்தமாகவே உள்ளது. கரோனா தொற்று பரவல் அச்சமும் இதற்கு ஒரு காரணம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT