கடலூர்

கடலூா் மாவட்டத்தில் ரூ.14.83 கோடிக்கு மது விற்பனை

DIN

கடலூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு ரூ.14.83 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.

கடலூா் மாவட்டத்தில் 144 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் தீபாவளிக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை ரூ.7.26 கோடிக்கும், தீபாவளி தினமான சனிக்கிழமை ரூ.7.57 கோடிக்கும் என 2 நாள்களிலும் சோ்த்து மொத்தம் ரூ.14.83 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

கடந்தாண்டு தீபாவளியன்றும், அதற்கு முந்தைய நாளிலும் சோ்த்து மொத்தம் ரூ.10.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியிருந்தது.

இதன்மூலமாக கடந்தாண்டை விட சுமாா் 50 சதவீதம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகிருப்பது தெரியவந்தது. மாவட்டத்தில் சராசரியாக தினமும் ரூ.1.50 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் மதுபானங்கள் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT