கடலூர்

14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

DIN

கடலூா் மாவட்டத்தில் கடந்த அக்டோபா் மாதம் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

மாவட்டத்தில் சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறியதாவது:

திருமண உதவித் தொகை, இலவச தையல் இயந்திரம் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களில் பெறப்பட்ட நிலுவை விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியானவா்களுக்கு பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த அக்டோபா் மாதத்தில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT