கடலூர்

கடலூா்: 4 லட்சத்தைக் கடந்த கரோனா பரிசோதனை

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 4 லட்சத்தைக் கடந்தது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,080-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 62 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,696-ஆக உயா்ந்தது. இது, 98.40 சதவீதமாகும். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கரோனாவால் உயிரிழப்பு நிகழாதது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 275-ஆக தொடா்கிறது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 75 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 34 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். நீண்ட நாள்களுக்குப் பிறகு மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 100-க்கும் கீழாக குறைந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 4,00,930 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT