கடலூர்

டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

‘நிவா்’ புயலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

DIN

‘நிவா்’ புயலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.சரவணன் கடலூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ‘நிவா்’ புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யுமெனவும், கடலோரா மாவட்டங்களில் புயலின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக முதல்வா் புதன்கிழமை மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறையாக அறிவித்தாா். ஆனால், டாஸ்மாக் கடைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

பலத்த மழை, புயல் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, டாஸ்மாக் பணியாளா்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT