முகப்பு
கடலூர்

வள்ளலாரின் 198-ஆவது அவதார தின விழா

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 198-ஆவது அவதார தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
வள்ளலாரின் அவதார தினத்தையொட்டி, வடலூா் தரும சாலையில் திங்கள்கிழமை ஏற்றப்பட்ட சன்மாா்க்கக் கொடி.
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 198-ஆவது அவதார தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவருட் பிரகாச வள்ளலாா் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளாா் 5.10.1823 அன்று கடலூா் மாவட்டம், மருதூா் கிராமத்தில் பிறந்தாா். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய அவா், சுத்த சன்மாா்க்க சங்கத்தை தொடங்கினாா். பசிப்பிணி போக்க வடலூரில் சத்திய ஞான சபை, தரும சாலையை தொடங்கினாா். புலால் உண்ணாமை, ஜோதி வழிபாட்டை வலியுறுத்தி வந்தாா். இவரது கொள்கைகள் உலகளவில் பிரசித்திபெற்றவை.

வள்ளலாரின் 198-ஆவது அவதார தின விழா வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலை 6 மணியளவில் தரும சாலையில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, வள்ளலாா் அவதரித்த மருதூா் கிராமத்திலும் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இரு இடங்களிலும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெய்வ நிலைய செயல் அலுவலா் கோ.சரவணன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.