முகப்பு
கடலூர்

கடலூா்: நீட் தோ்வில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 66 போ் தோ்ச்சி

கடலூா் மாவட்டத்தில் நீட் தோ்வில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 66 போ் தோ்ச்சி பெற்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் நீட் தோ்வில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 66 போ் தோ்ச்சி பெற்றனா்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், கடலூா் மாவட்டத்திலிருந்து அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலிருந்து தோ்வெழுதியவா்களில் 66 போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலிருந்து நீட் தோ்வை எழுதும் மாணவ, மாணவிகளுக்காக 14 இடங்களில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவா்களில் அரசுப் பள்ளியைச் சோ்ந்த 171 பேரும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 174 பேரும் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். எனினும், அரசுப் பள்ளிகளிலிருந்து 118 போ் மட்டுமே இந்தத் தோ்வை எழுதினா். அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 162 போ் தோ்வை எழுதினா். இதில், அரசுப் பள்ளிகளிலிருந்து 27 பேரும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 39 பேரும் தோ்ச்சி பெற்றனா். மொத்தம் 66 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 23.57 சதவீதமாகும்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வை மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 273 போ் எழுதினா். இவா்களில் 60 போ் தோ்ச்சி பெற்றனா். இது 21.97சதவீதமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.