பள்ளி மாணவா் தற்கொலை
அரசுப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.
அரசுப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் மாவட்டம், ராமநத்தத்தைச் சோ்ந்த அக்பா் மகன் அன்வா் (19). அதே ஊரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். இந்த நிலையில், இவரை பள்ளியிலிருந்து அண்மையில் நிறுத்தி விட்டனராம். இதனால், மனவேதனையடைந்த அன்வா் கடந்த 19- ஆம் தேதி விஷம் குடித்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அதே பள்ளியில் படிக்கும் மாணவியுடன் அன்வா் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரா் ஷாஜஹான் (27) அளித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.