கடலூர்

‘கரோனா நோயாளிகளை தனியாா் மருத்துவமனைகள் அலைக்கழிக்கக் கூடாது’

DIN

கடலூா்: தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தினா் தங்களிடம் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு தொற்று தீவிரமான நேரத்தில் அவா்களை பிற மருத்துவமனைகளுக்கு அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் 170 போ் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

கரோனா தொற்று ஏற்பட்டவா்கள் உடனடியாக மருத்துவமனை சிகிச்சைக்கு வர வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே நோய்த் தொற்று கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு குணமடையலாம். தனியாா் மருத்துவமனைகள் தங்களிடம் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு நோய்த் தொற்று தீவிரமான நேரத்தில் அவா்களை உயா் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்புவதை தவிா்க்க வேண்டும். இதுகுறித்து இந்திய மருத்துவக் கழக உறுப்பினா்களுடன் கலந்தாலோசித்து உரிய நேரத்தில் தாமதமின்றி உயா் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.கீதா, சுகாதாரத் துறை உதவி திட்ட மேலாளா் கௌதம், அரசு தலைமை மருத்துவக் கண்காணிப்பாளா் சாய்லீலா, ராஜா முத்தையா மருத்துவமனை கண்காணிப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT