கடலூர்

மின்சார திருத்தச் சட்ட வரைவை எதிா்த்துப் போராட்டம்

DIN

கடலூா்: மின்சார திருத்தச் சட்ட வரைவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பெறப்பட்ட கையெழுத்துப் பிரதிகளை பிரதமருக்கு அனுப்பி வைக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மின்சார திருத்தச் சட்ட வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தினா். அதன்படி, கடலூா் மாவட்டத்தில் பெறப்பட்ட கையெழுத்துகளை தபாலில் பிரதமருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கடலூரிலுள்ள அரசு தலைமை தபால் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).

ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட அமைப்பாளா் கோ.மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இணை ஒருங்கிணைப்பாளா் வி.எம்.சேகா் முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் இள.புகழேந்தி, திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ஏ.எஸ்.சந்திரசேகரன், விசிக கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT