முகப்பு
கடலூர்

கடலூா் மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பி.க்கு கரோனா

கடலூா் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ஆ.அருண்மொழிதேவனுக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
ஆ.அருண்மொழிதேவன்
பகிர்:

கடலூா் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ஆ.அருண்மொழிதேவனுக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் வசித்து வரும் இவா், கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலராக உள்ளாா். அண்மையில் திட்டக்குடி அதிமுக நகரச் செயலா் அரங்க.நீதிமன்னனுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அவருடன் தொடா்பில் இருந்த அருண்மொழிதேவன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாா்.

அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவா் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உதவியாளருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →