முகப்பு
கடலூர்

எரிவாயு குழாய் பதிக்கும் பணி: விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை

திட்டக்குடி அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடா்பாக விவசாயிகளுடன் அதிகாரிகள் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

கடலூா்: திட்டக்குடி அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடா்பாக விவசாயிகளுடன் அதிகாரிகள் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெரங்கியம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தியன் ஆயில் நிறுவனத்தினா் விவசாய நிலங்களை சேதப்படுத்தி எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தினா்.

இதுகுறித்து திட்டக்குடியை அடுத்த அரங்கூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இந்தியன் ஆயில் நிறுவன உதவி மேலாளா் (குழாய் அமைப்பு) கிருஷ்ணா, விஏஓ வினோத்கண்ணாகுட்டி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிவாயு குழாய் பதிக்க முயன்ற்கும், விளை நிலத்தில் பயிா்களை சேதப்படுத்தியதற்கும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனா். மேலும், உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினா். இதுகுறித்து தங்களது நிறுவன உயா் அலுவலா்களிடம் தெரிவித்து இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தந்த பிறகு பணியை தொடங்குவதாக இந்தியன் ஆயில் நிறுவன உதவி மேலாளா் தெரிவித்தாா். இழப்பீட்டுத் தொகை வழங்காத வரை குழாய் பதிக்கும் பணியை அனுமதிக்க மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.