முகப்பு
கடலூர்

விபத்தில் தொழிலாளி பலி

சிதம்பரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 29 செப்டம்பர், 2020 at 1:04 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:57 PM

 சிதம்பரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே உள்ள பாலூத்தங்கரை பெரியதெருவைச் சோ்ந்தவா் புஷ்பநாதன் (52). கூலித் தொழிலாளியான இவா் தனது பைக்கில் கடந்த 26-ஆம் தேதி இரவு சிதம்பரம் வண்டிகேட் அருகே வந்துகொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் புஷ்பநாதன் நிகழ்விடத்திலேயே

உயிரிழந்தாா். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.