கடலூர்

கடலூா்: மேலும் 45 பேருக்கு கரோனா

DIN

கடலூா் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 26,032 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 26,077-ஆக அதிகரித்தது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 26 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,344-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளில் 362 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 79 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் 44 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT