கடலூர்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை ஆய்வு செய்த வேட்பாளா்

DIN


நெய்வேலி: பணிக்கன்குப்பம் அண்ணா பொறியியில் கல்லூரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையை நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சட்டப் பேரவைத் தோ்தலில்

நெய்வேலி, பண்ருட்டி சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பம் அண்ணா பொறியியில் கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைப் பகுதியை நெய்வேலி சட்டப் பேரவை தொகுதி திமுக உறுப்பினரும், தொகுதியின் தற்போதைய வேட்பாளருமான சபா.ராஜேந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT