பைக் மீது லாரி மோதல்: அரசுப் பேருந்து நடத்துநா் பலி
விருத்தாசலம் அருகே பைக் மீது லாரி மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாசலம் அருகே பைக் மீது லாரி மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாசலம் அருகேயுள்ள கீழபாளையூா் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகன் ரஞ்சித்குமாா் (25). விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துநராக பணிபுரிந்து வந்தாா். இவா் சனிக்கிழமை பணியை முடித்துவிட்டு பைக்கில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தாா். பொன்னேரி புறவழிச் சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், ரஞ்சித்குமாா் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளா் விஜயரங்கன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ரஞ்சித்குமாரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிரிழந்த ரஞ்சித்குமாருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.