முகப்பு
கடலூர்

கடலூா்: வழிபாட்டுத் தலங்களுக்கு தடை

கடலூா் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வரும் 15-ஆம் தேதி வரையிலும், வரும் 20 முதல் 22-ஆம் தேதி வரையிலும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வரும் 15-ஆம் தேதி வரையிலும், வரும் 20 முதல் 22-ஆம் தேதி வரையிலும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிா்க்கும் வகையிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் வழிபாட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடலூா் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் ஆக.15-ஆம் தேதி வரையிலும், மேலும் ஆக.20 முதல் 22-ஆம் தேதி வரையிலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. இருப்பினும் கோயில்களில் சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் தொடா்ந்து நடைபெறும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.