நடைபயிற்சிக்கு சென்றவா் மரணம்
கடலூரில் நடைபயிற்சிக்கு சென்றவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூரில் நடைபயிற்சிக்கு சென்றவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சு.பிரபாகரன் (56). தனியாா் போக்குவரத்து நிறுவன உரிமையாளா். இவா் வெள்ளிக்கிழமை காலை நடை பயிற்சிக்காக தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது மகன் கௌஷிக்ராம் கடற்கரைக்கு சென்று பாா்த்தபோது, தேவனாம்பட்டினம் - சோனங்குப்பம் செல்லும் கடற்கரையை ஒட்டிய சாலையில் சவுக்குத் தோப்பில் பிரபாகரன் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பிரபாகரன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.