கடலூா்: கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் பெண் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் பெண் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 61,719-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 63 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 60,200-ஆக உயா்ந்தது. எனினும், பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூா் மாவட்டம், மங்களூரைச் சோ்ந்த 48 வயது பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 827-ஆக அதிகரித்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 630 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 62 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.