விசிக சாா்பில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு
கடலூா்கடலூா் நகரம் குப்பன்குளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.
கடலூா் நகரம் குப்பன்குளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.
கட்சியின் கடலூா் நாடாளுமன்றத் தொகுதி செயலா் பா.தாமரைச்செல்வன் பங்கேற்று மதிய உணவு வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாா். மாவட்ட விசிக துணை அமைப்பாளா் ஜெயக்குமாா், குப்பன்குளம் ரவி, உதயா, ஆகாஷ், ஜான், சத்யராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பொதுமக்களுக்கு தொடா்ந்து உணவு வழங்கிக் கொண்டிருக்கும் கடலூா் நகர விசிக செயலா் மு.செந்தில், நகர அமைப்பாளா் ஆறுமுகம், புஷ்பராஜ், முகாம் செயலா் கணேசன் ஆகியோருக்கு கட்சி சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.