கடலூர்

ஏரியை மீட்கக் கோரி நூதன போராட்டம்

DIN

விருத்தாசலத்தில் ஏரியை மீட்கக் கோரி இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் அருகே உள்ள நல்லூா் கிராமத்தில் சுமாா் 100 ஏக்கா் பரப்பில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை தனி நபா் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும், பாசன வாய்க்காலையும் மீட்க வேண்டும் என வலியுறுத்தி, விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் தங்களது கண்களை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேப்பூா் வட்டத் தலைவா் மணிவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த.கோகுலகிறிஸ்டீபன், பொருளாளா் இளங்கோவன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இவா்கள் கோட்டாட்சியா் வெ.ராம்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT