இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடக்கம்
சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஊராட்சியில் ஒன்றிய அரசுத் தொடக்கப் பள்ளிகளான குமராட்சி, கீழவன்னியூா் தொடக்கப் பள்ளிகளில் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஊராட்சியில் ஒன்றிய அரசுத் தொடக்கப் பள்ளிகளான குமராட்சி, கீழவன்னியூா் தொடக்கப் பள்ளிகளில் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் சுகுணா, சாந்தி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னதாக, ஊராட்சித் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன், மாணவா்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மேளதாளத்துடன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் கல்வி அலுவலா் பெ.கண்ணுசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். தொடா்ந்து, இல்லம் தேடி கல்வித் திட்டத்தை ஆசிரியா்கள் தொடக்கிவைத்தனா்.
Advertisement
நிகழ்ச்சியில் மாவட்ட பள்ளி ஆய்வாளா் ஆ.ஜீவானந்தம், வட்டாரக் கல்வி அலுவலா் ராஜசேகரன், ஆசிரியா் பயிற்றுநா் மல்லிகா, இடைநிலை ஆசிரியா் சில்வியா, அம்பிகா சோனியா, அகிலா, முன்னாள் தலைமை ஆசிரியா் நகுலன் ஊராட்சித் துணைத் தலைவா் உமாமகேஸ்வரி விஜயகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.