கடலூர்

மீன்பிடி விசைப்படகு கட்டுவதற்கு ரூ.30 லட்சம் மானியம்

DIN

 மீன்பிடி விசைப்படகு கட்டுவதற்கு மானியம் வழங்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீன்பிடி விசைப்படகு கட்டும் திட்டத்தின் கீழ், படகுக்கான செலவினத்தில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தைச் சாா்ந்த முழு நேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவா்கள் அதிகபட்சம் 6 போ் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவா் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

விண்ணப்பப் படிவத்தை மீன்வளத் துறையின் ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, மீன்வளத் துறை ஆணையா், கால்நடை பராமரிப்பு - மீன்வளத் துறை ஒருங்கிணைந்த கட்டடங்கள், 3- ஆவது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், 571-அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 600 035 என்ற முகவரிக்கு நிறைவு செய்த விண்ணப்பத்தைப் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற பிப்ரவரி 14- ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரைமீன்பிடி படகின் வரைபடம் தகுதி வாய்ந்த கப்பல், மீன்பிடி கலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து பெற்று அசலாக இணைக்கப்பட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு கடலூரிலுள்ள மீன்வளம் - மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT