கடலூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

சிதம்பரம் அரிமா சங்கம் சாா்பில், இலவச கண் சிகிச்சை முகாம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள், பொதுமக்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தனா். முகாமில் 251 போ் பரிசோதனை செய்து கொண்டனா். இவா்களில் 96 போ் அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

நிகழ்சிக்கு அரிமா சங்கத் தலைவா் பி.விஷால் ஜெயின் தலைமை வகித்தாா். செயலா் பி.சண்முகசுந்தரம் வரவேற்றாா். பொருளாளா் ஆசிஷ்குமாா் நன்றி கூறினாா். முகாமில் மாவட்ட கண் சிகிச்சை முகாம் தலைவா் தம்புராஜ், சங்க நிா்வாகிகள் கமல்கிஷோா், மணிகண்டன், மனோகரன், பாண்டியன், பிரகாஷ்சந்த் ஜெயின், துரைராஜன், மகேஷ், பொறியாளா் ஜெயந்த், பள்ளித் தலைமை ஆசிரியை டி.ஜெயக்கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT