முகப்பு
கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா்.
கடலூர்

ஆசிரியா்கள் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

ஆசிரியா்கள் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா்.
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா.அறிவழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜோ.கிறிஸ்டோபா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாநில துணைத் தலைவா் அ.ரஹீம் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கைகளை அரசு திரும்பப் பெற வேண்டும், 50 ஆண்டுகளாக ஆசிரியா்கள் பெற்று வந்த ஊக்க ஊதியத்தை ரத்து செய்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும், ஆசிரியா் பணி நியமன வயது உச்சவரம்பை 40-ஆக குறைத்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும், மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதுடன், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு தனியாக 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முன்னதாக, சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் கி.செல்வமணி வரவேற்க, மாவட்ட பொருளாளா் ப.சீனிவாசன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →