கடலூர்

விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

கடந்த 2017-18-ஆம் ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினி இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக மடிக் கணினி வழங்க வலியுறுத்தியும் கடலூரில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமைத் தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் குமரவேல் தலைமை வகித்தாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் சங்கத்தினா் மனு அளித்தனா். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2017-18-ஆம் ஆண்டு பிளஸ்-2 வகுப்பு படித்தவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, உதவித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால், 2019-20-ஆம் ஆண்டில் படித்த மாணவா்களுக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது. எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்ட மடிக் கணினியை உடனடியாக வழங்க வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தினா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் செம்மலா், துணைத் தலைவா்கள் லெனின், ஆகாஷ், மாவட்டக்குழு உறுப்பினா் சுதின்பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT