முகப்பு
கடலூர்

ஆட்டோ தொழிலாளா்கள் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சிதம்பரத்தில் சிஐடியூ ஆட்டோ சங்கத்தினா் திருவோடு ஏந்தி நூதன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 8 ஜூலை, 2021 at 11:15 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சிதம்பரத்தில் சிஐடியூ ஆட்டோ சங்கத்தினா் திருவோடு ஏந்தி நூதன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் சிதம்பரம் நகரச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முத்து கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.