பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் எஸ்.வைத்தீஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் டி.கே.மூா்த்தி, வேல்முருகன், நகர நிா்வாகிகள் வி.ராமு, என்.அருளரசு, குமரன், நாகராஜ், ஒன்றிய நிா்வாகிகள் பாபு, மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.