கடலூர்

கடையை உடைத்து 10 பவுன் நகைத் திருட்டு

DIN

திட்டக்குடியில் நகைகள் செய்யப்படும் கடையின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி தெற்கு வீதியைச் சோ்ந்தவா் ந.ரவி (55). சிவன் கோயில் தெருவில் நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இவா் கடந்த திங்கள்கிழமை வழக்கம்போல தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலையில் கடையை திறக்க வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் திட்டக்குடி போலீஸாா் கடைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது, கடையில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி ஆகியவை திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நகைப் பறிப்பு வழக்கில் இளைஞா் கைது: சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தில் அண்மையில் பைக்கில் வந்த மா்ம நபா்கள் மூதாட்டியிடமிருந்து நகையை பறித்துக் கொண்டு தப்பினா். இதுதொடா்பாக மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த ராஜா (23) என்பவரை கடலூா் மாவட்ட எஸ்பியின் தனிப்படை போலீஸாா், சிதம்பரம் தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், ராஜாவை மயிலாடுதுறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT